சத்தீஸ்கர் மாநிலம், முங்கேலி மாவட்டம் அருகேயுள்ள ராம்கோபால் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா (45). இவருக்கு அனில் யாதவ்(25) என்ற மகனும், மது (19) என்ற மகளும் உள்ளனர். நேற்று அனில் யாதவ் வீட்டில் இருந்தபோது சுனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரமடைந்த சுனில் யாதவ் தாய் சுனிதாவை சுத்தியைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதைக் கண்ட சகோதரி மது அவரை தடுக்க முயன்றபோது அவரையும் சராமரியாக தாக்கியுள்ளார்.