தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடும்பத் தகராறு : அண்ணியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் - குற்ற செய்திகள்

உத்தரப் பிரதேசம் : பிசவுலி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் குடும்பத் தகராறில் தன் அண்ணியை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொலை தற்கொலை
கொலை தற்கொலை

By

Published : Jun 3, 2020, 3:44 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், பிசவுலி எனும் கிராமத்தைச் சேர்ந்த நபர், தன் அண்ணியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுட்டுக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சில நாட்களுக்கு தனது கிராமத்திற்கு திரும்பிய ராகுல் (வயது 24) எனும் நபருக்கு, அங்கு தன் அண்ணனின் மனைவியுடன் தொடர்ந்து வாக்குவாதங்கள் அதிகரித்து வந்துள்ளது.

இந்நிலையில், இன்று இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரை சுட்டுக் கொன்ற ராகுல், தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை அடைந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்த நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :வன்கொடுமை: 'வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட வடமாநில பெண்'

ABOUT THE AUTHOR

...view details