தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவமனையின் அலட்சிய போக்கு: பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு - மருத்துவமனையின் அலட்சிய போக்கு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் மருத்துவமனையின் அலட்சியத்தாலும் மருத்துவரின் பொறுப்பற்ற செயலாலும் 25 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்

By

Published : Jul 23, 2020, 8:45 PM IST

மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தில் மருத்துவமனையின் அலட்சியத்தால் 25 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். குணா மாவட்டம் அசோக் நகரை சேர்ந்தவர் ஆரத்தி ராஜக். இவரின் கணவர் கடந்த சில நாள்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளார். இந்நிலையில், அவர் தனது கணவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்கான மருந்தை வாங்கி வந்து தரும்படி ஆரத்தியிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பணம் இல்லாத காரணத்தால் அவரால் மருந்து வாங்க முடியவில்லை. இதனால், மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கவில்லை. உடல்நிலை மோசமடைந்த நிலையில் ஆரத்தியின் கணவர் உயிரிழந்தார்.

மத்தியப் பிரதேசம்

இதுகுறித்து ராஜக் கூறுகையில், " ஜூலை 21ஆம் தேதி, உடல் நிலை மோசமடைந்த நிலையில் என் கணவரை மருத்துவமனையில் சேர்த்தேன். பணம் இல்லாத காரணத்தால் என்னால் பணம் வாங்க முடியவில்லை. எனவே, இரவு முழுவதும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. இதன் காரணமாக அவர் உயிரிழந்தார்" என்றார். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பூஞ்ச் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்!

ABOUT THE AUTHOR

...view details