போபால்:சிங்பூர் காவல் நிலையத்திலிருந்த கைதியை தவறுதலாக காவலர் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம், மாநிலம் சிங்பூர் காவல் துறையினர் நேற்று (செப்.27) கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட ராஜபதி குஷ்வாஹா என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, காவலர் ஒருவர் தவறுதலாக கையிலிருத்த துப்பாக்கியை அழுத்தியதில் ராஜபதி குஷ்வாஹா மீது குண்டு பாய்ந்துள்ளது.