பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடிய தொழிலதிபர் தஹாவூர் ரானா (59). 2008 மும்பை தாக்குதலை அரங்கேற்றிய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுக்கு இவர் பொருள்கள் விநியோக செய்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ரானாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 2011ஆம் ஆண்டு இவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக லாஸ் ஏஞ்சலஸ் சிறையில் சிறைவாசம் அனுபவித்துவந்த ரானாவுக்கு உடல்நிலை மோசமடைந்ததாலும், கரோனா பெருந்தொற்று பரவிவருவதாலும் கருணையின் அடிப்படையில் அவர் சமீபத்தில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.