தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பீதியில் ஒருவர் தற்கொலை! - கர்நாடகாவில் கரோனா வைரஸ் இருக்கும் சந்தேகத்தில் ஒருவர் தற்கொலை

பெங்களூரு: கர்நாடகாவின் தட்சிணா கன்னட மாவட்டத்தில் ஒருவர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளோம் என்ற சந்தேகத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

கரோனா பீதியில் ஒருவர் தற்கொலை
கரோனா பீதியில் ஒருவர் தற்கொலை

By

Published : Mar 28, 2020, 7:34 AM IST

கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னட மாவட்டத்தில் உள்ள மெராமஜலு கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவ ஷெட்டி(56). இவர், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த சில நாள்களாகவே உடல் நலம் சரியில்லாமல் காணப்பட்ட அவருக்கு, தனக்கு கரோனா வைரஸ் தாக்கியுள்ளதோ என்ற சந்தேகம் வந்துள்ளது. இதனால், தன் குடும்பத்திலும், பணிபுரியும் இடங்களிலும் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார்.

இதையடுத்து, இன்று அவரது மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர், வீடு திரும்பிய அவரது மனைவி, கணவர் தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சதாசிவ ஷெட்டியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேபோல், உடுப்பி மாவட்டத்தில் உள்ள உப்பூர் கிராமத்தைச் சேர்ந்த, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்கு கரோனா தாக்கியுள்ளதாக எண்ணி தற்கொலை செய்துகொணடார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details