மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சஜோர் கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் (19). இவர் அருகேயுள்ள கோயிலுக்கு தண்ணீர் பிடிப்பதற்காக ஒருகை பம்புக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் குடத்தில் தண்ணீர் பிடித்திருந்தபோது, அருகே இருந்த மனோஜ் கோலி, அவரது இரண்டு சகோதரிகளான தாராவதி கோலி, பிரியங்கா கோலி ஆகியோரின் குடங்களில் தண்ணீர் பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த மனோஜ் கோலியும் அவரது இரண்டு சகோதரிகளும் விகாஸை கடுமையாக தாக்கியதோடு மட்டுமின்றி அவர் தண்ணீர் பிடித்துவைத்த குடத்தில் சிறுநீர் கழித்துள்ளனர். இதை குடிக்குமாறு மூவரும் விகாஸை வற்புறுத்தியுள்ளனர். இதனால், மிகவும் மனவேதனை அடைந்த விகாஸ் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.