தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூரில் மதுபானம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை முயற்சி!

பெங்களூரு: ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபானம் கிடைக்காத விரக்தியில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dsdsd
sd

By

Published : Mar 30, 2020, 8:49 PM IST

கர்நாடகாவில் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹனுமந்தப்பா. இவர் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் மதுபானம் வாங்கமுடியாமல் தவித்து வந்துள்ளனர். இவர் வீடியோ ஒன்றையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.அதில், எனக்கு சரக்கு கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்வேன் எனவும் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், சரக்கு வாங்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த காரணத்தினால், ஹனுமந்தப்பா கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரைக் காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபானத்திற்காக உயிரை விடும் சம்பவங்கள் சில நாள்களாக கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அரங்கேறிவருகிறது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'சரக்கு வேணுமா...? மெசேஜ் பண்ணுங்க' : வாட்ஸ்-ஆப்பில் மது விற்ற மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details