ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பிளாட்டில் சஞ்சீவ் குலியா (45) என்பவர் வசித்துவந்தார். இந்நிலையில், சனிக்கிழமை காலை சந்தேகத்திற்கிடமான முறையில் வீட்டிற்குள் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டறிந்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.ஹெச்.ஓ.வின் நவின் பிராஷர் சதர் காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சஞ்சீவ் குலியா தங்கியிருந்த பிளாட்டில் மின்சார இணைப்புகள் ஏதுமில்லை.