தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அனுமதியின்றி திருமணநாள் விழா கொண்டாடியவர் மீது வழக்குப்பதிவு! - violating health norms

சமூக வலைதளங்களில், நண்பர்கள் சேர்ந்து அனுமதியின்றி திருமண நாள் விழா கொண்டாடியது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து சம்பந்தபட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

wedding anniversary
wedding anniversary

By

Published : May 26, 2020, 6:03 PM IST

அலிகர் (உத்தரப் பிரதேசம்): அலிகர் காவல் துறையினர், அனுமதியின்றி தங்களின் 25ஆவது திருமணநாள் விழாவை நண்பர்களுடன் கொண்டாடியவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவன் வர்ஷ்னே என்பவர் தான் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது. அவரின் 25ஆவது திருமணநாள் விழாவைக் கொண்டாட உறவினர்கள், நண்பர்கள் என பலரை அழைத்துள்ளார்.

இந்த விழாவில் எந்தவிதமான தனிநபர் இடைவெளியும் கடைபிடிக்கவில்லை எனவும் யார் முகத்திலும் கவசம் காணப்படவில்லை எனவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details