தெலங்கானா மாநிலம் சங்காரேட்டி மாவட்டத்தில் அனந்தசாகர் கிராமத்தைச் சேர்ந்த அம்ஷம்மாவுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் தாண்டிய உறவு இருப்பதை அக்கம்பக்கத்தினர் வழியாக அவரது கணவர் ஜுரு சாயுலுக்கு தெரியவந்துள்ளது. இதனால், அவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது.
மனைவியின் தலையை வெட்டி காதலன் வீட்டில் வீசிய கணவர்!
ஹைதராபாத்: திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்திருந்த மனைவியின் தலையை வெட்டிய கணவர், காதலன் வீட்டில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டி ஜூரு கொலை செய்துள்ளார். இதுமட்டுமின்றி மனைவியின் உடலில் இருந்த தலையை தனியாக வெட்டி பைக்கில் வைத்து, சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மனைவியின் காதலின் வீட்டு வாசலில் தலையை வீசி ஏறிந்துள்ளார்.
இதையடுத்து, அவர் நேராக காவல் நிலையத்திற்குச் சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.