டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் செல்போன் திருட்டு சந்தேகத்தின் பேரில் நேற்று (ஜூன் 16) ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
செல்போன் திருடியதாகக் கூறி ஒருவர் அடித்துக் கொலை - செல்போன் திருட்டு
டெல்லி: ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் செல்போன் திருடியதாகக் கூறி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில்; "பாபா பூரே ஷா தர்கா அருகே உள்ள டிடிஏ பூங்காவில் கொலை நடந்ததாக தகவல் கிடைத்தது. பின்னர், சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடல் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில், சராய் காலே கானில் வசிக்கும் மேத்தாப்(41) என்பவர் டிடிஏ பூங்கா, பாபா பூரே ஷா தர்கா அருகே பேட்டரி சார்ஜிங் கடையை நடத்தி வருகிறார். இவரது செல்போனை அடையாளம் தெரியாத ஒருவர் திருடினார். அவரை பிடித்து இரும்புக் கம்பி, பிளாஸ்டிக் குழாயால் மேத்தாப் தாக்கினார். இந்நிலையில் இறந்தவரின் பெயர் கவுதம், இவர் பேரில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது" என்றனர்.