தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலியை சந்தித்த இளைஞர் அடித்து கொலை - Tamil latest news

லக்னோ: காதலியை சந்தித்த காதலனை அப்பெண்ணின் தந்தையும், அண்ணனும் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடித்து கொலை
அடித்து கொலை

By

Published : Jun 4, 2020, 8:55 PM IST

உத்தரப் பிரதேசத்தில் சம்பால் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் அவரது காதலியை சந்தித்துள்ளார். இதனைக் கண்ட அப்பெண்ணின் தந்தையும், அண்ணனும் அந்த இளைஞரை அடித்து கொன்றுள்ளனர். இச்சம்பவம் ஜூன் 1 ஆம் தேதி இரவு நடந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “காதலியைச் சந்தித்த அவனிஷ் சிங் என்ற இளைஞரை அப்பெண்ணின் தங்தையும் அண்ணனும் அடித்து சாலையின் ஓரம் வீசியுள்ளனர். மறுநாள் காலை அவ்வூர் கிராமவாசிகள் கண்டு காவல் துறைக்கு தகவலளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்று அவரை சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அடித்து கொலை

பின்னர் அந்த சுகாதார நிலையத்திலேயே அவர் உயிரிழந்தார். அச்சமயம் அவர் தனது காதலியின் தந்தையும், அண்ணனும் அடித்து சாலையில் வீசியதாக கூறினார். அதன் அடிப்படையில் தற்போது அப்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணன் தப்பியோடியதால் அவரை தேடிவருகிறோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details