உத்தரப்பிரதேசத்தில் ஜான்பூர் மாவட்டத்தில் செல்போன் திருடியதாக ஒருவரை, சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் கொடூரமாகத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல் திருடியதாக எழுந்த சந்தேகம்: கொடூரமாகத் தாக்கிய உள்ளூர்வாசிகள்! - லக்னோ மொபைல் திருட்டு
லக்னோ : மொபைல் திருட்டு சந்தேகத்தில் ஒருவரை, அப்பகுதி மக்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
beat
அந்நபரை பொதுவெளியில் செருப்பு, கட்டைகளைக் கொண்டு அடித்தது சட்டத்துக்கு மீறிய செயல் எனவும் பலர் கருத்து தெரிவித்தனர்.
தகவலறிந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய மூவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில், இரண்டு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.