தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாக்லெட் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; இளைஞருக்கு வலைவீச்சு! - 4 வயது சிறுமியை சாக்லேட் வழங்குவதன் மூலம் கற்பழிக்க முயற்சி

பெங்களூரு: யாத்கிரில் நான்கு வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த 23 வயது இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பாலியல் தொந்தரவு!
பாலியல் தொந்தரவு!

By

Published : Dec 29, 2019, 12:11 PM IST

கர்நாடாக மாநிலம் யாத்கிர் பகுதியைச் சேர்ந்தவர் நிங்கப்பா (23). இவர் தனது வீட்டருகே வசிக்கும் 4 வயது சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்ட பெற்றோர், சம்பவ இடத்திற்கு வரும் முன்னே குழந்தையை அப்படியே விட்டுவிட்டு அந்த இளைஞர் தப்பிச்சென்றார்.

சோராபூர் காவல் நிலையம்

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் சூரபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் தப்பி ஓடிய நிங்கப்பாவை வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பொங்கலுக்கு தயாராகும் வெல்லம் - விலையை உயர்த்த தொழிலாளர்கள் கோரிக்கை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details