தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பட்டியலின இளைஞர்கள் மீது வெறித்தனமான தாக்குதல்' - இரண்டு தலித் இளைஞர்களை கண்மூடித்தனமாக அடிக்கும் காணொலி

ராஜஸ்தான்: திருட்டு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட, இரண்டு பட்டியலின இளைஞர்களை கண்மூடித்தனமாக அடிக்கும் காணொலி பார்மரில் வைரலாகியுள்ளதையடுத்து, அதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருடியதற்காக  தலித் இளைஞர்கள் மீது வெறித்தனமான தாக்குதல்
திருடியதற்காக தலித் இளைஞர்கள் மீது வெறித்தனமான தாக்குதல்

By

Published : Feb 23, 2020, 8:25 AM IST

ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் கடந்த வியாழக்கிழமையன்று திருட்டு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இரு பட்டியலின இளைஞர்களை கொடூரமாக அடிக்கும் காணொலி வைரலாகியுள்ளது. இந்த காணொலியில் பார்மர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட முகமதுகானின் சகோதரர் முராத்கான் கொடுத்தப் புகாரின் பேரில், காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த காணொலியில் மூன்று பேர் இரும்புச் சங்கிலியால் தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அவரை கிராமத்தில் நுழையக்கூடாது என மிரட்டியுள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்தில், முராத் தன்னுடைய புகாரில் மற்றுமொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில் தன்னுடைய அந்தரங்க உறுப்புகளில் இரும்புக் கம்பிகளை சொருகியுள்ளனர் என்று வேதனை தெரிவிக்கிறார்.

பார்மரில் பட்டியலின இளைஞர்கள் மீது வெறித்தனமான தாக்குதல்

இந்தப் புகாரை விசாரித்த காவல் கண்காணிபாளர் சரத், 'முராத்தின் புகாரில் உள்ளவைகள் காணொலியில் இல்லை. எனவே, மேற்கொண்டு விசாரித்துதான் முடிவு செய்ய வேண்டும். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவரை கைது செய்வோம்' என்றார். குற்றம்சாட்டப்பட்ட லாரி ஓட்டுநர் தற்போது பார்மரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நிர்பயா கைதி வினய் மனு மீது உத்தரவு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details