தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விசாகப்பட்டினம் - சென்னை ரயில், 14 கிலோ கஞ்சா -  20 வயது கடத்தல்காரனைப் பிடித்த காவல்துறை! - central railway station

ஹைதராபாத்: ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த வரை காவல் துறையினர் கைது செய்தனர்.

cannabis

By

Published : Nov 22, 2019, 2:08 PM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விரைவு ரயிலிலிருந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒருவர் போதை பொருள் கடத்தி வருவதாக ரயில்வே காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்குச் சென்ற தனிப்படை காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ரகசியத் தகவலின் மூலம் கிடைத்த அடையாளத்துடன் அங்கு வந்த ஸ்ரீநாத் (20) என்ற ரயில் பயணியை ரயில்வே காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவரது உடைமைகளைச் சோதனையிட்டுப் பார்த்ததில் சுமார் 14 கிலோ கிராம் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்த காவல்துறையினர் 14 கிலோ கிராம் கஞ்சாவை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போதை வஸ்து காய்ச்சும்போது தீ விபத்து: இருவரிடம் காவல் துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details