நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. வைரஸ் தொற்று சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரிடமும் பரவிவருகிறது. இருப்பினும், இஸ்லாமியர்கள்தான் இந்தியாவில் கோவிட்-19 பரவக் காரணம் என்ற ரீதியில் தொடர்ந்து இங்கு வெறுப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தனே மாவட்டம் அருகேயுள்ள காஷிமிரா பகுதியில் கஜனன் சதுர்வேதி என்பவருக்குச் செவ்வாய்க்கிழமை காலை சில பொருள்களை டெலிவரி செய்ய இஸ்லாமியர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது கஜனன் சதுர்வேதி டெலிவரி நபரிடம் பெயரைக் கேட்டுள்ளார்.