டெல்லியைச் சேர்ந்த ஒருவர் ஐபிஎஸ் அதிகாரி போல் வேடமிட்டு, பெண் ஒருவரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவே, போலி நபரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், "உடற்பயிற்சி கூடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்த போலி நபர், தான் ஐபிஎஸ் அதிகாரி எனவும், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியும் ரூ.1 லட்சம் பெற்றுள்ளார்.