ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் 16 வயது பெண் ஒருவர் நேற்றிரவு புகார் ஒன்றை அளித்தார். அதில் தன் தந்தை கடந்த 5 ஆண்டுகளாக என்னைக் கொடுமைக்குள்ளாக்கி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுவந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்! - Police arrests
ஜெய்ப்பூர்: நாகவுர் மாவட்டத்தில் பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்புணர்வு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
raped
இப்போதும் அதேபோல் வன்புணர்வில் ஈடுபட அவர் முயற்சித்தபோது அவரிடமிருந்து தப்பித்து காவல் நிலையம் வந்ததாகவும், அவரிடமிருந்து தன்னைக் காப்பாற்றுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து அவரின் தந்தையை நாகவுர் காவல் துறையினர் இன்று கைது செய்தனர். பெற்ற மகளை தந்தையே ஐந்து ஆண்டுகளாக இப்படிப்பட்ட கொடுஞ்செயல் புரிந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளியில் பாலியல் தொந்தரவு: நடவடிக்கை எடுக்காத தாசில்தாரைக் கண்டித்து தர்ணா