தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடிபோதையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது - குடிபோதையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

குடிபோதையில் பிரமதர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Drunk man
Drunk man

By

Published : Jan 3, 2021, 3:56 PM IST

பின்டு சிங் என்ற நபர் டெல்லியில் உள்ள கைலாஷ் பூரி நகரில் வசித்துவருகிறார். 35 வயதான இவர் தச்சு வேலை செய்து வருகிறார். பின்டு சிங் நேற்று குடித்துவிட்டு போதையான நிலையில், காவல் துறையினருக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.

தான் பிரதமர் நரேந்திர மோடியை கொல்லப்போவதாகவும், இந்த கொலையை செய்யும் அடியாளுக்கு 30 கோடி ரூபாய் சன்மானம் தரப்போகிறேன் எனவும் உளறியுள்ளார்.

அவரை உடனடியாக கைது செய்த காவல் துறையினர் அங்குள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி... உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details