ரோஸ் வேலி மற்றும் சாரதா நிதி நிறுவனங்கள் மீதான மோசடி வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரியாக செயல்பட்ட ராஜீவ் குமாரை விசாரிக்க, சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றனர். அப்போது கொல்கத்தா காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சிரிது நேரம் கழித்து விடுவித்தனர். இச்சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜீவ் குமார் இல்லத்திற்கு சென்றார்.
தர்ணா போராட்டதை தொடங்கினார் மம்தா! - தர்ணா
காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அங்கு கொல்கத்தா மேயர், மாநில டிஜிபி உள்ளிட்டோர் வந்ததும் அவர்களுடன் ஆலோசனை நடத்திய மம்தா பானர்ஜி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாகவும், உரிய வாரன்ட் இல்லாமல் சி.பி.ஐ., அதிகாரிகள் அவர் வீட்டிற்கு சென்றதாகவும், அவர்கள் நினைத்திருந்தால் சி.பி.ஐ., அதிகாரிகளை கைது செயத்திருக்கலாம் என்றும் கூறினார். ஜனநாயகத்தை காத்திட, தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மம்தா அறிவித்தார். இதையடுத்து கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் முன்பு மம்தா தனது தர்ணாவை தொடங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றுள்ளார்.