மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது திருணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே பெரும் வார்த்தைப் போர் வெடித்து பரப்புரைக் களம் யுத்தகளமாய் மாறியிருந்தது. வாக்குப்பதிவின்போது இருக் கட்சிக்கு இடையே பெரும் வன்முறையே நடந்தேறியது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, மோடியை ஜனநாயக முறையில் அறைவேன் என கருத்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு மோடி சொன்ன கருத்து அவருக்கு ஒரு ஆதரவலையே ஏற்படுத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மோடி தர்பார்...! தயாராகும் மம்தா - BJP
கொல்கத்தா: மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
mamata
இந்நிலையில், மே 23ஆம் தேதியன்று வெளியான தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை அளித்த நிலையில், மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு மம்தா செல்வாரா எனக் கேள்வி எழுந்தது.
இந்நிலையில் மம்தா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "நான் மற்ற மாநில முதலமைச்சர்களுடன் பேசியுள்ளேன். இது பதவி ஏற்பு விழா என்பதால் கலந்து கொள்ள உள்ளேன்" என்றார்.