தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘மோடியை வீட்டுக்கு அனுப்ப இவர்தான்யா சரியான ஆளு’ - Chandrababu Naidu

கொல்கத்தா: பாஜக தலைமையிலான அரசை வீழ்த்தி, மத்தியில் புதிய ஆட்சியை அமைக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முக்கிய பங்காற்றுவார் என, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு

By

Published : May 9, 2019, 7:48 AM IST

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் ஐந்து கட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் லால்கர் பகுதியில், ஜார்கிராம் மக்களவைத் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "மேற்கு வங்கத்தின் புலியான மம்தா பானர்ஜி, இன்னும் சில நாட்களில் நாட்டுக்கே புலியாக மாற உள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும். மத்தியில் புதிய அரசை உருவாக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முக்கிய பங்காற்றுவார்", என தெரிவித்தார்.

தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் காரக்பூரில் இன்று நடைபெறவுள்ள மெகா பேரணியில் மம்தா பானர்ஜியும், சந்திரபாபு நாயுடுவும் இணைந்து பரப்புரை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details