தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அரசு அதிகாரிகளை அலட்சியப்படுத்திய மம்தா; மீண்டும் அதிகரிக்கும் உரசல்!

கொல்கத்தா: கரோனா குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட அதிகாரிகளை மேற்கு வங்க அரசு அலட்சியப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மம்தா
மம்தா

By

Published : Apr 21, 2020, 11:59 PM IST

கரோனா வைரஸ் பரவல் குறித்து மாநிலம் தோறும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அப்படியான குழு ஒன்று, மேற்கு வங்க மாநிலத்தின் கல நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக அங்கு சென்றுள்ளது. ஆனால், அம்மாநில அரசு அதிகாரிகளும், நிர்வாக அலுவலர்களும் அக்குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ள அக்குழுவின் தலைவர் அபூர்வா சந்திரா, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை தாம் சந்தித்ததாகவும், ஆனால் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மம்தா - மோடி

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எழுதியிருந்த கடிதத்தில், மத்தியக் குழு அனுப்பி வைக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details