கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்றின் தாக்கம் 500-ஐ நெருங்குகிறது. மேலும், இதுவரை இந்த வைரஸ் தொற்றால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக் காப்பதில் மேற்கு வங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், மக்களின் ஒத்துழைப்பும் கூட்டு முயற்சியும் வைரஸ் பரவலுக்கு எதிராகப் போராட உதவும்.