மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், 24 ஆவது கிழக்கு மண்டல கவுன்சிலின் கூட்டம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் டெல்லியல் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து அமித் ஷா முன்னிலையில் பல அடுக்கடுக்கான கேள்விகளை மம்தா பானர்ஜி முன்வைத்தார்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, டெல்லியில் நடந்த வன்முறை மிகவும் வருத்தமளிக்கிறது. அது நடந்திருக்கக்கூடாது. வன்முறையில் பொதுமக்கள் பலரும், காவல்துறையினர், உளவுப் பிரிவு அலுவலர் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் அமைதியை மீட்டெடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவவும் அவசரத் தேவை உள்ளது. டெல்லியில் அமைதி திரும்ப அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:'இது கண்ணியமற்ற அரசியல்' - கொதிக்கும் பிரகாஷ் ஜவடேகர்!