கொல்கத்தா துறைமுக அறைக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, "ஆயுஷ்மான் பாரத், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி போன்ற திட்டங்களை மேற்கு வங்க மாநில அரசு அனுமதிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால் இந்த மாநில மக்களும் பயனடைவர்.
ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் கடும் நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 75 லட்சம் மக்கள் பயனடைவர். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தால் சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய், எட்டு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் போடப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டங்களில் இடைத்தரகர்கள் இல்லை, பணம் சுரண்டல் இல்லை. இத்திட்டங்கள் பயனாளர்களை நேரடியாக சென்றடைகின்றன. இதுபோன்ற நல்ல திட்டங்களை யார்தான் அனுமதிப்பார்கள்?" என்று மம்தா பானர்ஜியை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.