இது குறித்து எம்பி சவுமித்ரா கான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று வடக்கு 24 பாராகன்ஸ் பகுதியில் பாஜகவுக்கும், திருணாமுல் காங்கிரஸுக்கும் இடையே நடந்த மோதலில் பாஜகவைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர். அந்த வன்முறைக்கு முழுக்க முழுக்க திருணாமுல் காங்கிரஸ் கட்சிதான் காரணம்.
'மம்தா ஒரு ரத்தம் குடிக்கும் பேய்..!'- பாஜக எம்பி சவுமித்ரா கான் குற்றச்சாட்டு - மம்தா ஒரு ரத்தம் குடிக்கும் பேய்
கொலகத்தா: "மேற்வங்கத்தில் பாஜகவினர் மீது நடக்கும் தாக்குதலுக்கெல்லாம், முதலமைச்சர் மம்தா பானர்ஜிதான் காரணம். அவர் 'ரத்தம் குடிக்கும் பேய்' போல் நடந்து கொள்கிறார்" என்று, பாஜக எம்பி சவுமித்ரா கான் கடுமையாக சாடியுள்ளார்.
பாஜக எம் பி சுவுமித்ரா கான்
மேற்கு வங்கத்தில் நடக்கும் இந்து இஸ்லாமியர்கள் பிரச்னைகள் அனைத்தையும் திருணாமுல் காங்கிரஸ் கட்சிதான் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. பிரச்னையில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஒன்று படுகாயம் அடைகிறார்கள் அல்லது கொல்லப்படுகின்றார்கள். இது போன்று வெறிசெயலில் ஈடுபடும் அக்கட்சியினரை அடக்காமல் வேடிக்கை பார்த்து வரும் மம்தா பானர்ஜி ரத்தம் குடிக்கும் பேய் போல் செயல்பட்டுவருகிறார்" என்று, காட்டமாக தெரிவித்தார்.