இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் மே 24ஆம் தேதி கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அவர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பர். ரமலான் மாதத்தின் முதல் நாள், நாளை கடைபிடிக்கப்படவுள்ளது. இதுகுறித்த வாழ்த்து செய்தியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.
அதில், "அனைவருக்கும் ரமலான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புனித மாதத்தில் சுயபரிசோதனை செய்து கொண்டு நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஒரு மாத காலத்திற்கு நோன்பு மேற்கொள்ளவுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.