கொல்கத்தா:மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பார்க் தெரு பகுதியில் அமைந்துள்ள ஆலன் பூங்காவில் கிறிஸ்துமஸ் திருவிழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, " கடந்த வருடத்திலிருந்து தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறேன். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை மத்திய பாஜக அரசு ஏன் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கவில்லை? அனைத்து மக்களுக்கும் அவர்களது பண்டிகையை கொண்டாட உணர்வுகளும் உரிமைகளும் உள்ளது எனில் கிறிஸ்தவர்கள் என்ன தீங்கு செய்தார்கள்?
இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது அங்கிகரிக்கப்பட்ட விடுமுறை நாளாக இருந்தும் மத்திய அரசு தேசிய விடுமுறை நாளாக மறுப்பது ஏன்? இந்த கரோனா காலகட்டத்தில், மக்கள் தங்களது பண்டிகைகளைக் கொண்டாடுவது கடினம் தான் எனினும், அவர்கள் வழிகாட்டு நெறிமுறைளைப் பின்பற்றி கொண்டாட அனுமதிக்கப்பட வேண்டும்.
"இந்தியாவில் மதச்சார்பின்மை உள்ளதா என்ற கேள்வி எழ செய்கிறது. இங்கு நடைபெறும் மத வெறுப்பு அரசியலுக்காக வருந்துகிறேன். இதை கண்டிக்கவும் விரும்புகிறேன்." என்றார்.