நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அத்தியாவசியப் பொருள்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மசோதா உள்ளிட்ட விவசாயம் சார்ந்த மசோதாக்களை நிறைவேற்றியது.
இந்த மசோதாக்கள் மீது நேற்று(செப்.20) நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்படி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்பட எட்டு பேரை ஒரு வாரம் இடைநீக்கம் செய்வதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.