தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் - மம்தா ட்வீட் - இந்திய அரசியலமைப்பு குறித்து மம்தா பானர்ஜி

கொல்கத்தா: குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்தச் சூழ்நிலையில், அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.

Mamata latest tweet
Mamata latest tweet

By

Published : Jan 26, 2020, 9:21 PM IST

Updated : Jan 26, 2020, 9:38 PM IST

71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று காலை ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை பறக்கவைத்தார்.

இந்நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "குடியரசு தினத்தன்று நமது அரசியலமைப்பையும் அதில் கூறப்பட்டுள்ள இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாப்போம் என்று உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) உள்ளிட்டவற்றில் மத்திய அரசை மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கொஞ்சம் படிங்க சார்' - மோடிக்கு காங்கிரசின் குடியரசு தின பரிசு!

Last Updated : Jan 26, 2020, 9:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details