பிரதமர் மோடியை சந்தித்து மாநிலத்தின் வளர்ச்சி குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதற்காக கொல்கத்தா விமான நிலையம் வந்த அவர், பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென்னை சந்தித்துள்ளார்.
ஓய்வுபெற்ற ஆசிரியரான ஜசோதாபென், மேற்கு வங்கத்தில் உள்ள கோயில்களுக்கு இரண்டு நாட்கள் பயணம் வந்துள்ளார். பின்னர் பயணம் முடிவடைந்ததையடுத்து சொந்த ஊர் திரும்புகையில், விமானநிலையத்தில் ஜசோதா பென்னை மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பிரதமரின் மனைவி ஜசோதாவிற்கு புடவை பரிசளித்ததாகவும், தகவல் கூறப்படுகிறது.