ஐ.என்.எகஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடியானதைத் தொடர்ந்து, சிபிஐ அலுவலர்கள் அவரை கைது செய்தனர். இந்நிலையில், ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் பற்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
'சிதம்பரத்தை கையாண்ட விதம் வருத்தமளிக்கிறது' - மம்தா பானர்ஜி - சிதம்பரம்
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கையாண்ட விதம் வருத்தமளிப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Mamata banerjee
இது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், மூத்த அரசியல்வாதியான ப. சிதம்பரம் நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கையாண்ட விதம் வருத்தமளிப்பதாக உள்ளது என்றார். மேலும், நான் சட்டரீதியாக பேசவில்லை. சிபிஐ அலுவலர்களின் செயல்முறை தவறாக உள்ளது, என்றார்.