கொல்கத்தா:மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பாண்டு நடைபெறவுள்ளது. இதில், பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தச் சமயத்தில், மத்திய அரசின் பிரதமர் விவசாய நிதியுதவித் திட்டத்திற்கு ஒராண்டுக்கு மேலாக அனுமதி மறுத்துவந்த அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, அத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதனை விமர்சித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாக மத்திய அரசுத் திட்டத்தினை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மம்தா பானர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய நட்டா, "தேர்தல் களத்தில் தோல்வியின் விளிம்பில் உள்ளதை உணர்ந்த மம்தா பானர்ஜி நீண்ட காலத்துக்குப் பிறகு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்திற்கு அளித்துள்ளார்.