கோவளம் தாஜ் ஓட்டலில் இரண்டாவது நாளாக நடந்த பேச்சுவார்த்தையின் சில முக்கிய பிரச்னைகள் இடம்பெற்றிருந்ததாக தகவல் கசிந்துள்ளது. மகாபலிபுரம் சிற்பத்தை பார்வையிட்டபடி பிரதமரும் சீன அதிபரும் நேற்று மாலை பேசிக்கொண்டனர். அப்போது அவருக்கு தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து இன்று இருவரும் கண்ணாடி அறைக்குள் தனியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி மட்டும் கலந்துகொண்டனர். அப்போது சீன- இந்திய மக்களிடையே தொடர்பை அதிகரிப்பது, ஆசிய பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டும் பொருட்டு இருநாட்டு எல்லைப்பகுதியில் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய சீன எல்லைப் பகுதி 3,500 கிலோ மீட்டர் கொண்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. ஏற்கனவே இருநாட்டு படைகளும் எல்லை விவகாரத்தில் கைகலப்பில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.