கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர, ஜூன் 8ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், மால்களைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில், கேரளாவில் உள்ள மால்களைத் திறக்க மால் நிர்வாகங்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தாங்கள் தயாராகி வருவதாகவும், தங்கள் ஊழியர்கள் தீவிரமாக தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அம்மாநில மால் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், மக்கள் அனைவராலும் தகுந்த இடைவெளி பின்பற்றப்படுகிறதா எனக் கண்காணிக்கும் பொருட்டு ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு அலுவலரை நியமிக்க உள்ளதாகவும், கிருமி நாசினி உபகரணங்கள் கட்டடத்தின் 30 முதல் 35 இடங்களில் வைத்து பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள தற்போதைய வீழ்ச்சியில் இருந்து தங்கள் வணிகம் மீள ஆறு மாதங்கள் முதம் ஒரு வருடம் தேவைப்படும் என்றும் அம்மாநிலத்தில் செயல்பட்டுவரும் பிரபல மால் ஒன்றின் நிர்வாக இயக்குநர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :லாக்டவுன் 5.0 விதிமுறைகள் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு