கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தபின், அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
கர்நாடகா முதலமைச்சராகிறார் மல்லிகார்ஜுன கார்கே?
பெங்களுரு: கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கேவிடம், தங்களை முதலமைச்சராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே என செய்தியாளர் கேட்கையில், "இதுகுறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. இந்த கூட்டணி ஆட்சி தொடர நான் விரும்புகிறேன். கூட்டணியில் பிளவு ஏற்பட இதுமாதிரியான செய்திகள் ஊடங்களில் பரப்பப்படுகிறது" என்றார்.