கேரளாவின் மலப்புரம் நகரில் இயற்கைக்குக் குந்தகம் விளைவிக்காத வண்ணம் நெகிழிக் குப்பகளை அப்புறப்படுத்த மலப்புரம் மாநகராட்சி
பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 'நெகிழிக்கு உணவு' என்ற புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. நெகிழி குப்பைகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நபர்களுக்கு உணவளிப்பதே இந்த திட்டத்தின் சாரம்சமாகும்.
இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஜாஃபர் மாலிக், சட்டப்பேரவை உறுப்பினர் உபாய்துலா ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, ஆட்சியர் ஜாஃபர் மாலிக் மாநகராட்சிக்கு நெகிழி குப்பைகள் அடங்கிய மூட்டை ஒன்றை வழங்கினார். அதற்கு மாநகராட்சி ஊழியர்கள் ஆட்சியரிடம் உணவை வழங்கினர்.