இரண்டு நாள் பயணமாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஏனாம் பிராந்தியம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.
துணைநிலை ஆளுநர் மீது உரிமை மீறல் புகார் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
புதுச்சேரி: சட்டப்பேரவை உறுப்பினருக்கு தெரியாமல் தொகுதிக்கு வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், ஆளுநர் ஏனாம் பகுதிக்கு வரும் தகவல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான எனக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் ஏனாம் பகுதியில் ஆந்திர காவல் துறையினர் குவிக்கப்படுவது இதுவரை இல்லாத ஒன்றாகும். இதற்கு அமைதியான முறையில் எதிர்ப்பை பொதுமக்கள் தெரிவிப்பார்கள். எனக்கு தெரியாமல் எனது தொகுதிக்கு வந்த துணைநிலை ஆளுநர் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க:'போராட்டத்தைத் தூண்டுவது வருத்தமளிக்கிறது' - கிரண்பேடி
TAGGED:
puduchery latest news