தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிரண்பேடி இரண்டு மடங்கு செலவு செய்துள்ளார்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் - புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி: ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாசின் செலவுகள் குறைக்கப்பட்டு உள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பெருமிதம் தெரிவித்திருந்த நிலையில், பிற ஆளுநர்களை விட அவர் இரண்டு மடங்கு அதிகமாக செலவு செய்திருப்பதாக புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மல்லாடி
மல்லாடி

By

Published : Jun 22, 2020, 4:35 PM IST

புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த ஏழுபது நாள்களாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கரோனா தடுப்புப் பணி செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்தார். கடந்த 85 நாள்களாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் என பலரும் கரோனா எதிரான பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தி நோயை தடுக்க பாடுபட்டு வருகிறோம்.

ஆனால் எழுபது நாள்களாக கிரண்பேடி வெளியே வராமல் தூங்கிவிட்டு கடந்த 15 நாள்களாக இரவு ஏழு மணிக்கு மேலாக தன்னிச்சையாக அறிவிப்புகளை வெளியிட்டு அரசு நடவடிக்கைகளைத் தடுத்து வருகிறார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விருப்பமிருந்தால் அரசு நடத்தும் கூட்டங்களில் பங்கேற்று கருத்து கூறலாம். எப்போதும் தன்னை எளிமையாக காண்பித்துக் கொள்ளும் ஆளுநர் கிரண்பேடி, ராஜ் நிவாஸ் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

ஆனால், தற்போது இரண்டு மடங்காக செலவு செய்துள்ளார். கடந்த ஆண்டு தனது ராஜ் நிவாஸ் அலுவலகத்திற்காக ஆறு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details