தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசிய ஆண் காவலர் மீது வழக்குப்பதிவு - male policeman behaved inappropriately to a female police officer

புதுச்சேரி: பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் ஐஆர்பிஎன் துணை கமாண்டென்ட் ஒருவர் ஆபாசமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police
police

By

Published : Apr 16, 2020, 3:12 PM IST

புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவலர்களுக்குப் பதிலாக ஊர்க்காவல் படை வீரர்கள், ஐஆர்பிஎன் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனிடையே புதுச்சேரி ஐஆர்பிஎன் துணை கமாண்டென்ட்டாகப் பணியாற்றிவருபவர் சுபாஷ். இவருக்கு கரோனா பாதுகாப்புப் பணிக்காக திருபுவனை பகுதியில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் பணியிலிருந்த ஊர்க்காவல்படை பெண் காவலரிடம், சுபாஷ் ஆபாசமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து திருபுவனை காவலர்களுக்கு புகார் வந்தது. இதன்பேரில் திருபுவனை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காவலர் சுபாஷ், பெண் காவலரிடம் ஆபாசமாக நடந்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து சுபாஷை திருபுவனை காவல் துறையினர் கைதுசெய்து அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:கருணை காட்டாத காவலர்கள்... ஒரு கி.மீ. தூரம் தந்தையை தோளில் சுமந்த மகன்

ABOUT THE AUTHOR

...view details