தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூவாயிரம் கிமீ தொலைவிலிருந்து காணொலி மூலம் அறுவை சிகிச்சை செய்து நாய்க்குட்டியின் உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவர்கள் - Malaysian dog surgery

கேரளா: இதய நோயால் பாதிக்கப்பட்ட மினியேச்சர் பின்ச் ப்ரீட் இனத்தைச் சேர்ந்த நாயின் உயிரை காப்பாற்றி கேரள மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.

maxi dog
maxi dog

By

Published : May 3, 2020, 1:38 AM IST

மினியேச்சர் பின்ச் ப்ரீட் இனத்தைச் சேர்ந்த மேக்ஸ் என்ற நாய்க்குட்டி மலேசிய நாட்டில் உள்ள பினாங்கில் பிறந்து வளர்ந்து வந்தது. 800 கிராம் எடைகொண்ட இந்த இரண்டு மாத நாய்க்குட்டிக்கு பிறந்ததிலிருந்தே அரிதான இதயக் கோளாறு இருந்துள்ளது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இதனை அதன் உரிமையாளர் மலேசியாவின் பினாங்கிலுள்ள ஒரு பிரபல கால்நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

நாய்க்குட்டியை பரிசோதித்த கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், மலேசிய கால்நடை மருத்துவர் குழு தலைவருமான மருத்துவர் ஷிபு சுலைமான் தலைமையிலான மருத்துவ குழுவிற்கு, அறுவைச் சிகிச்சை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உயிருக்கு போராடி வரும் நாயின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர் ஷிபு சுலைமைான் 3 ஆயிரம் கிமீ தொலைவிற்கு அப்பாலிருந்த கேரளா மாநிலம் வயநாடு பூக்கோடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்களை அணுகியுள்ளார். அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் சூர்யதாஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் டெலி கைடட் சர்ஜரி முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, மலேசியாவில் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் இந்த சிக்கலான இதய வால்வு பிரச்னை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். மனிதர்களுக்கு செய்வது போன்று நாய்க்கு இவ்வாறு சிகிச்சை செய்வது இதுவே முதல் முறையாகும். உயிருக்கு போராடிய மேக்ஸ் நாய்க்குட்டியின் இதய வால்வு பிரச்னை நீங்கி தற்போது நலமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்லாயிரம் கிமீ தொலைவிலிருந்து டெலி கைடட் சர்ஜரி முறையில் அறுவை சிகிச்சை செய்து நாய்க்குட்டியின் இதய வால்வு பிரச்னையை சரிசெய்து அதன் உயிரை காப்பாற்றிய கால்நடை மருத்துவர் சூர்யதாஸ் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க:கரோனா: பிறந்து 20 நாள்களே ஆன குழந்தை உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details