தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரபல மலையாள எழுத்தாளர் அஷிதா மரணம் - Vismaya Chhihnang

கேரளா: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரும், கவிஞருமான அஷிதா இன்று காலமானார்.

மலையாள எழுத்தாளர் அஷிதா

By

Published : Mar 27, 2019, 6:12 PM IST

ஏப்ரல் 5, 1956 ஆம் ஆண்டு பிறந்த அஷிதா, எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ள அவர், பல மொழிபெயர்ப்பு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அதில் ‘அபூர்ண விரமங்கள், விஸ்மய சிகினங்கள், அஷிதாயுடே கதைகள்’ குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அஷிதா, பத்மராஜன் விருது - தாதாகதா (2000), லலிதாம்பிகா அந்தராஜனம் விருது (1994), எடசேரி விருது (1986) போன்ற பல உயரிய விருதுகளை வென்றுள்ளார்.

63 வயதான அஷிதா பல மாதங்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது.

ABOUT THE AUTHOR

...view details