புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காலில் சிறிய அறுவை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் புதுச்சேரி மாநில பெற்றோர் மற்றும் மாணவர் நல சங்கத்தலைவர் நாராயணசாமி, புதுச்சேரி மக்கள் மன்றம் தலைவர் விசிசி நாகராஜன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
மக்கள் மன்றம் செய்தியாளர்ச் சந்திப்பு அப்போது “புதுச்சேரியில் அரசு மருத்துவம் என்பது ஏழை மக்களுக்கு ஒரு கேள்விக்குறியாக உள்ளது. முதலமைச்சர் மூட்டு அறுவை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவது புதுச்சேரி அரசு மருத்துவமனை தரமான மருத்துவமனை இல்லையா என்ற கேள்வியை மக்களிடையே எழுப்பியுள்ளது” என்றனர்.
இதையும் படிங்க...மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை