மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடிகை ஸ்வரா பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. ஒரு நல்ல குடிமகளாக வரி செலுத்துகிறேன். ஆனால் நான் கேள்வி கேட்கும்போது எனக்கெதிராக தேச துரோக வழக்கு பதியப்படுகிறது.
இந்த ஜனநாயக நாட்டில் பயங்கரவாதியை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது குற்றமாகாது. ஆனால் கேள்வி கேட்பது மட்டும் குற்றமாகும். அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பதால் நான் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்படுகிறேன்.