தமிழ்நாடு

tamil nadu

டெல்லி கரோனா விவகாரம்; தேசிய மனித உரிமை ஆணையத்தை நாடும் காங்கிரஸ்

By

Published : Jun 9, 2020, 6:42 PM IST

டெல்லி: தலைநகரில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் நடைமுறைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கான் விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அஜய் மாக்கான்
அஜய் மாக்கான்

டெல்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதை அடுத்து இந்த சூழலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை காங்கிரஸ் நாடியுள்ளது.

டெல்லி காங்கிரஸ் மூத்தத் தலைவர் அஜய் மாக்கான் விரிவான மனுவை எழுதியுள்ளார். அதில், இதுபோன்ற வரலாறு காணாத பெருந்தொற்றை எதிர்கொள்ள மனித உரிமை ஆணையத்தின் உதவித் தேவைப்படுகிறது. டெல்லியில் தற்போதைய சூழல் கரோனா பாதிப்பால் மிகவும் மோசமடைந்துவருகிறது. டெஸ்ட் பாசிடிவிட்டி ரேட் எனப்படும் பாதிப்பு நிலைமை 27 விழுக்காடாக உள்ளது, அது 10 விழுக்காடாக குறையும் வரை டெல்லியில் லாக்டவுன் தளர்வுகள் மேற்கொள்ளக் கூடாது.

அத்துடன், டெல்லியில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் 70 விழுக்காடு படுக்கைகளை உடனடியாக தயார் நிலையில் ஏற்பாடு செய்து வைக்க வேண்டும். மேலும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதை மனித உரிமை ஆணையம் முறையகக் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:டெல்லிவாசிகளுக்கு மட்டுமே கரோனா சிகிச்சை: மாநில அரசின் அறிவிப்புக்கு எதிராக மனு

ABOUT THE AUTHOR

...view details