தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் விதமாக பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு அளவு 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்தி பாதுகாப்பு தளவாடி தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்கவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனத் தெரிவித்துள்ளது.