நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொதுமக்கள் வருமானமின்றி அத்தியவாசியப் பொருள்கள் வாங்கவும், போக்குவரத்து சிக்கல்களால் பொருள்கள் கிடைக்காமலும் தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது,
இந்நிலையில், கரோனா பரவலைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றும் அத்தியாவசியப் பொருள்களான சோப்பு, சானிட்டைசர்கள், முகக் கவசங்கள் ஆகியவை மீது அரசு வரி வசூலிப்பது தவறென்றும் அவற்றை தளர்த்தக் கோரியும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
”கரோனா பரவலைத் தடுக்க உதவும் கருவிகளுக்கு வசூலிக்கப்படும் வரியைத் தளர்த்தக் கோரி எவ்வாறு வலியுறுத்துகிறோமோ அவ்வாறே இந்த அத்தியாவசியப் பொருள்களின் மீதும் வரி விதிப்பது தவறு. ஜி எஸ் டி இல்லாத கரோனாவை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது சானிட்டைசர்கள், ஹாண்ட் வாஷ் உள்ளிட்ட பொருள்களின் மீது 18 சதவிகிதமும், இரத்தப் பரிசோதனை ஸ்ட்ரைப்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களின் மீது 12 சதவிகிதமும், முகக் கவசங்கள், பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவைமீது 5 சதவிகிதமும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:தொடர் தாக்குதல்; ஏப்ரல் 23ஆம் தேதி போராட்டம் நடத்தும் மருத்துவர் கூட்டமைப்பு